வயலில் ஆடு மேய்ந்ததால் தகராறு; உறவினர்கள் மோதல்

வேதாரண்யம் அருகே வயலில் ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-18 16:26 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வயலில் ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
உறவினர்கள் மோதல்
வேதாரண்யத்தை அடுத்த கைலவனம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தாயுமானவன் (வயது55).விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் ராவுத்தசாமி(50). இவர்கள் இருவரும் உறவினர்கள்.
 தாயுமானவனுக்கு சொந்தமான வயலில் ராவுத்தசாமியின் ஆடுகள் மேய்ந்துள்ளன. இதுகுறித்து தாயுமானவன், ராவுத்தசாமியிடம் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு, ஒருவருக்கு தாக்கி கொண்டனர்.
2 பேர் காயம்
 இதில் காயம் அடைந்த தாயுமானவன் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், ராவுத்தசாமி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்