மாமல்லபுரம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

மாமல்லபுரம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கரை ஒதுங்கியது.

Update: 2022-02-18 15:26 GMT
மாமல்லபுரம், 

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், தேவனேரி அருகே கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தனியார் பண்ணை வீடு அருகே 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்