மக்காச்சோளதட்டுகளை விளைநிலங்களில் இருப்பு வைக்கும் விவசாயிகள்

மக்காச்சோளதட்டுகளை விளைநிலங்களில் இருப்பு வைக்கும் விவசாயிகள்

Update: 2022-02-18 13:46 GMT
குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் கோடையை கருத்தில் கொண்டு மக்காச்சோளதட்டுகளை விளைநிலங்களில் விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.
மக்காச்சோள தட்டு
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்றுவருகிறது. குடிமங்கலம் பகுதியில் விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் அதிகமுள்ள நிலையில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 90 முதல் 110 நாட்களில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராகி விடும்.
மக்காச்சோளம் கோழி தீவனமாகவும், மக்காச்சோளத் தட்டு கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இந்த ஆண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.ஒரு சில பகுதிகளில் அறுவடை நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் மக்காச்சோளக் தட்டுகளை கால்நடை தீவனமாக பயன்படும் வகையில் விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.
இருப்பு வைத்தல்
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது ழைக் காலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பது எளிது. ஆனால் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பது கடினம். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மக்காச் சோளதட்டு உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த மக்காச்சோள தட்டுகளை இருப்பு வைத்து வருகின்றோம். மக்காச் சோளதட்டுகளை ஒரு ஆண்டுகள் வரை இருப்பு வைத்து தீவனமாக பயன்படுத்தமுடியும். ஒரு ஏக்கரில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோள தட்டுகள் தற்போது ரூ.9ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
இந்த ஆண்டு படைப்புழு தாக்குதல் மற்றும் தொடர் மழை காரணமாக மக்காச்சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோள தட்டுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்