வால்பாறை அருகே சாலையோரத்தில் பதுக்கி வைத்திருந்த 181 சேலைகள் பறிமுதல்
வால்பாறை அருகே சாலையோரத்தில் பதுக்கி வைத்திருந்த 181 சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வால்பாறை
வால்பாறை அருகே சாலையோரத்தில் பதுக்கி வைத்திருந்த 181 சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க ேதர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து பணியிலிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி நடராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
4 மூட்டைகளில் 181 சேலைகள்
குரங்குமுடி எஸ்டேட் செல்லும் வழியில் யாரும் இல்லாத நிலையில் சாலையோரத்தில் 4 மூட்டைகள் கிடநதது. அந்த மூட்டைகளையும் பறக்கும் படையினர் கைப்பற்றினர். மேலும், அதனை திறந்து பார்த்த போது அதில் 181 சேலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், கேட்பாரற்று கிடந்த 4 மூட்டைகளில் 181 சேலைகள் இருந்தது.
அதனை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்த இடத்தில் தி.மு.க.வினரோ, அல்லது வேறு யாரும் இல்லை. இந்த பரிசு பொருட்கள் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.