மகசூலை அதிகரிக்க பயன்படும் தென்னை டானிக் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

மகசூலை அதிகரிக்க பயன்படும் தென்னை டானிக் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

Update: 2022-02-18 12:01 GMT
சுல்தான்பேட்டை

மகசூலை அதிகரிக்க பயன்படும் தென்னை டானிக் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். 

தென்னை டானிக்கின் பயன்கள்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவிகள், கிராமப்புற தங்கல் திட்டத்தின்கீழ், சுல்தான்பேட்டையில் தங்கி அதைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பயிற்சி எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, வாரப்பட்டி கிராமத்தில் விவசாயிகளிடம் தென்னை டானிக்கின் பயன்கள், பயன்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:- 

6 மாத இடைவெளி

தென்னை டானிக் என்பது பயிர் பூஸ்டராக தென்னை மரங்களில் பயன்படுத்தப்படுகிறது. தென்னை மரங்களில் மகசூலை குறைக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளான குரும்பை உதிர்தல் மற்றும் சொறிப்பூச்சி தாக்குதலை குறைக்கவும் இந்த டானிக் பயன்படுகிறது. இந்த டானிக்கில் வளர்ச்சி ஊக்கீகள் இருப்பதால் வறட்சி காலங்களிலும் நல்ல பயன் தருகிறது. இந்த டானிக்கை பயன்படுத்துவதன் மூலமாக காய்களின் தரம் மேம்படுவதோடு 10 முதல் 40 சதவீதம் மகசூலும் அதிகரிக்கிறது. தென்னை மரத்திலில் இருந்து 2 அடி தள்ளி 10 செ.மீ. ஆழத்தில் இளஞ்சிவப்பு நிறமுள்ள வேரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் தென்னை டானிக்கை 6 மாத இடைவெளியில் 2 முறை ஒரு மரத்திற்கு 200 மில்லி என்ற அளவில் வேரில் செலுத்த வேண்டும். அதன்மூலம் தென்னை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, மகசூலும் அதிகரிக்கிறது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்