மதுபார் நடத்தியவர் கைது

மதுபார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-02-17 21:00 GMT
திருச்சி
 திருச்சி எடமலைப்பட்டிபுதூர், கிருஷ்ணாபுரம், கோரையாறு பாலத்தின் கீழ் மது விற்றதோடு அங்கு பார் நடத்தியதாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், செங்குழி கிராமத்தைச் சேர்ந்த ரவியை(38) எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து ஏராளமான மது பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் செய்யப்பட்டன.
திருச்சி கோட்டை பகுதிக்கு உட்பட்ட பாபு ரோடு பகுதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்ற அதே பகுதியை சேர்ந்த குமாரையும்(54), காவேரி ரோடு பகுதியில் மதுவிற்ற குமரனையும்(35) கோட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்