பிரகதீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
பிரகதீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரஹன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான சுவாமி - அம்பாள் கோவில் குளத்திற்கு எழுந்தருளினர். இதையடுத்து குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் சிவன், விஷ்ணு மற்றும் முருகன் ஆகிய சுவாமிகளுக்கு உகந்த மாதம் என்பதாலும், மாசி மகத்தில் விரதம் இருந்து ஸ்நானம் செய்து வழிபடுவதால் இத்தெய்வங்களின் அருள் கிடைக்கும், பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும் மாசி தீர்த்தவாரியில் பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.