ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

களக்காடு அருகே ஆசிரியையிடம், மர்ம நபர்கள் சங்கிலி பறித்துச் சென்றனர்.

Update: 2022-02-17 20:06 GMT
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மேலகாரங்காட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சகாயலதா (வயது 49). இவர் களக்காடு அருகே வடக்கு மீனவன்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும், சகாயலதா தனது செல்போன் மற்றும் 7 பவுன் தங்கச்சங்கிலியை ஸ்கூட்டரில் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டி விட்டு, அந்த ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
மீனவன்குளம்-நாங்குநேரி ரோட்டில் சென்றபோது, 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து ஸ்கூட்டரில் இருந்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலி, செல்போன் இருந்த ஸ்கூட்டரை பறித்துக்கொண்டு அதில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்