ஆயுதங்களுடன் 2 பேர் கைது

ஆயுதங்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-17 20:05 GMT
மதுரை, 
மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் எல்லைக்கு உட்பட்ட பழங்காநத்தம், அக்ரகாரம், ராமர் கோவில், பழைய மாநக ராட்சி, சலவை மையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது  2 பேர் பதுங்கியிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்கள் 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பழங்காநத்தம் நேதாஜி நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 27), வில்லா புரம் தென்றல் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி (27) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களை போலீசார் சோதனை செய்த போது அவர்களிடம் 2 கத்திகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்