வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவு தினத்தன்று பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-17 20:04 GMT
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவு தினத்தன்று பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகள்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், 363 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் ஒரு வார்டில் வேட்பாளர் இறந்து விட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மொத்தம் 658 வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். 
பதற்றமானவை 
மாவட்டம் முழுவதும் 103 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் 8 அதிரடிப்படை போலீஸ் வாகனங்களில் 100 அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். 
இதுதவிர மாவட்டம் முழுவதும் தேர்தல் நடைபெறும் இடங்கள் 56 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 இந்த 56 மண்டலங்களிலும் வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். 2 ஆயிரம் போலீசார் வாக்குப்பதிவு தினத்தன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 2 ஆயிரம் பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மாவட்டம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் சுமுகமாகவும், சுதந்திரமாகவும் மக்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, பிரச்சினைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்