வாணியம்பாடியில் குட்கா விற்ற 2 பேர் கைது
வாணியம்பாடியில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா, பான்பராக் கடைகளில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.
அவருடைய உத்தரவின்பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் டீ கடையில் மறைத்து வைத்து குட்கா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்று கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த தென்னரசு (22) என்பவரும் குட்கா விற்றுள்ளார். அவர்களை 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.