பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்ததையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-02-17 19:29 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 22-ந் தேதி எண்ணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில்  3 நகராட்சிகள்,  7 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம்,பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி பறக்கும் படை குழுக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

வாகன சோதனை

அதன்படி பறக்கும் படை குழுவினர் நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், லாரி, சரக்கு வாகனம், மினி லாரி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என பாரபட்சமின்றி அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்