480 மதுபான பாட்டில்களுடன் ஒருவர் கைது

தொண்டி அருகே 480 மதுபான பாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-17 19:06 GMT
தொண்டி,

தொண்டி அருகேயுள்ள சோளியக்குடி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது..அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சோளியக்குடி கிராமத்தில் உள்ள ஒரு கடையின் பின்புறம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததும் பெட்டி பெட்டியாக மதுபானம் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து 12 பெட்டியில் இருந்த 480 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கு மதுபானம் விற்று கொண்டிருந்த முகில்தகம் பெரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 51) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 110, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்