காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்
காரமடை
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்
காரமடை அரங்கநாதர் கோவில்
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினசரி இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதை தொடர்ந்து கருடசோவையும் நடைபெற்றது. 15 ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் மலையில் இருந்து பெட்டத்தம்மன் அழைப்பு நடைபெற்றது.
16-ந்தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.
தேரில் வீற்றிருந்த அரங்கநாத பெருமானை தரிசிக்க பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பாக ஊர்பிரமுகர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனையடுத்து மாலை 4.25 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் விஜயலட்சுமி, கேட்டாட்சியர் ரவிசந்திரன்,
மேட்டுப்பாளையம் துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டது.தேரின் முன்னும், பின்னும் ஏராளமான பக்தர்கள் ரங்கா, கோவிந்தா, என்ற எழுப்பியகோஷங்களுடனும், தாசர்களின் சங்கொளியும் விண்ணை அதிரவைத்தது.
தேர் நான்கு ரத வீதிகளில் பத்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்து இரவு தேர் நிலைத் திடலை வந்து அடைந்தது.
அன்னதானம்
மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் விற்றிருந்து பவனி, வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர்.
காரமடை அரங்கநாத பெருமாள் தேரோட்டத்தை ஒட்டி பல்வேறு அமைப்புகள் சார்ப்பாக பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டத்தை ஒட்டி காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
பரிவேட்டை
காரமடை நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன்,
மேற்பார்வையில்100-க்கும் மேற்ப்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு நான்கு ரத வீதி, பஸ் நிலையம் மற்றும் நகரில் அனைத்து பகுதிகளையும் சுழற்சி முறையில் தூய்மை படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
தேரோட்டத்தை ஒட்டி காரமடை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று (வெள்ளிகிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
நாளை (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா சேஷ வாகன உற்சவம்,
20-ந்தேதி மாலை 6.15 மணிக்கு சந்தான சேவையும், 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.