நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வே்ட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வே்ட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் கூடுதலாக 10 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நாள் அன்றும், வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குலுக்கல் முறையில் தேர்வு
மேலும் தேர்தலின் போது எந்தெந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிவார்கள் என்பதும் கணினி மூலம் குலுக்கல் முறையில் கலெக்டர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.