பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்தது

மன்னார்குடி அருகே பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்தது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2022-02-17 17:41 GMT
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவி.
மன்னார்குடி:-

மன்னார்குடி அருகே பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்தது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மாணவியை பாம்பு கடித்தது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுவேந்திரன். இவருடைய மகள் நவரஞ்சனி(வயது16). இவர், சவளக்காரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 
நவரஞ்சனி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். இந்த நிலையில் பள்ளியில் கழிவறைக்கு சென்ற நவரஞ்சனியை அங்கு இருந்த பாம்பு கடித்து விட்டது. 

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆசிரியர்கள், மாணவியை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
மாணவியை எந்த வகை பாம்பு கடித்தது என்று தெரியவில்லை,  இருப்பினும் மாணவிக்கு அளித்த சிகிச்சையில் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்