கடத்தூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

கடத்தூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-02-17 16:52 GMT
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நல்லகுட்ல ஹள்ளியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 27). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த, பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று விட்டார். இதையடுத்து சஞ்சீவ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ்குமாருக்கு, 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சையத் பர்கத் தீர்ப்பு கூறினார். இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சஞ்சீவ் குமாரை வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்