அதிகாரிக்கு கொலை மிரட்டல் அ.ம.மு.க. வேட்பாளரின் கணவர் கைது
அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. வேட்பாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சி.புதுரை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது 49). இவர் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி ராணி (40) அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 6-வது வார்டில் போட்டியிடுகிறார். இதே வார்டில் அ.ம.மு.க. சார்பில் பிரபாகரன்(28) மனைவி சன்மதி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி ராணி வந்த கார் மீது பிரபாகரன் அவரது உறவினர் நிதிஷ்குமார் ஆகியோர் கல்வீசி தாக்கினர். இதில் ராணி காயம் அடைந்தார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் பிரபாகரன் முன்ஜாமீன் பெற்று வெளியில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று கொடைரோடு சுங்கச்சாவடி அருகே கருப்புச்சாமியை பிரபாகரன் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார்.
இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.