நீடாமங்கலம்:-
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் குருபகவான் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அணிந்து குருபகவானை தரிசனம் செய்தனர்.