பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-02-17 12:00 GMT
பெருமாநல்லூர் அருகேயுள்ள காளிபாளையம் படையப்பாநகரைச் சேர்ந்தவர் பாண்டியன் . கோவில் பூசாரியான இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தொழில் தேவைக்காக பாண்டியன் பல்வேறு இடங்களில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியாததால் பாண்டியன் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்