கிணத்துக்கடவில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கிணத்துக்கடவில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் மகா கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனிதநீர் குடங்கள் மேளதாளங்கள் முழங்க கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கோபுரத்தின் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் விநாயகர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.