திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தெப்ப திருவிழா
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.
திருக்குறுங்குடி:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் 25-வது ஆண்டு 2 நாள் தெப்ப உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. மாலையில் பெருமாள், தாயார்களுடன் தெப்பத்தையொட்டி உள்ள தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளை தொடர்ந்து ராமானுஜ ஜீயர் முன்னிலையில் அழகிய நம்பிராயர், தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளினர். 12 முறை தெப்ப மண்டபத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை) மலை மேல் உள்ள திருமலை நம்பி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.