சிவன் கோவில் மாசி திருவிழா தேரோட்டம்

பாப்பாக்குடி சிவன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-02-16 20:12 GMT
முக்கூடல்:
பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் சமேத திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் கோவில் மாசித்திருவிழா 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் கும்பாபிஷேகம், இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று காலையில் சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்த ருளினர். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன், தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பாப்பாக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலர் சுப்பிரமணியன், முக்கூடல் நகரச் செயலர் வில்சன் மற்றும் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்