பேரையூர்
பேரையூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று சாப்டூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராம்பிரகாஷ் என்ற மணி (வயது 27) என்பவரை இதுதொடர்பாக சாப்டூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.