ஆலங்குடி அருகே ஆயில் மில் சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆலங்குடி அருகே ஆயில் மில்லின் சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-16 18:37 GMT
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குப்பகுடியில் தனியார் ஆயில் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் பேராவூரணி தாலுகா வீரியன் கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மில்லின் ஒரு பகுதியில் ரவிச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்