போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

திருநங்கைகளுக்கு உதவுதல் தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

Update: 2022-02-16 17:31 GMT
தேனி:

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், திருநங்கைகளுக்கு உதவுதல் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி பேசினார். 

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், ஆயுர்வேத டாக்டர் பிரித்தா நிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

திருநங்கைகளுக்கு சமூக பாதுகாப்பு அளித்தல், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சட்ட உதவு அளிக்க ஏற்பாடு செய்தல், அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல் தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்