பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
தூத்துக்குடி கல்லூரியில் பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு, சைபர் குற்றம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஏ.பி.சி கல்லூரி பேராசிரியை சுப்புலட்சுமி, விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என் கல்லூரி பேராசிரியர் சாமி, தூத்துக்குடி அருள்ராஜ் ஆஸ்பத்திரி சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆரத்தி கண்ணன், இயக்குநர் அருணாசலராஜன், கல்லூரி செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முத்துச் செல்வம், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், பேராசிரியைகள் சுபாஷினி, ராஜேசுவரி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.