விற்ற நிலத்தை திரும்ப வாங்கியதால் ஆத்திரம் அடைந்து தேமுதிக பிரமுகரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

விற்ற நிலத்தை திரும்ப வாங்கியதால் ஆத்திரம் அடைந்து தேமுதிக பிரமுகரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-15 21:57 GMT

துடியலூர்

விற்ற நிலத்தை திரும்ப வாங்கியதால் ஆத்திரம் அடைந்து தே.மு.தி.க. பிரமுகரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தே.மு.தி.க. பிரமுகர்

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48). தே.மு.தி.க. முன்னாள் மாவட்ட செயலாளர். 

மேலும் இவர் சரவணம் பட்டியில் பத்திர எழுத்தர் அலுவலகம் நடத்தி வந்தார். 

இவருக்கு சொந்தமான நிலம் நல்லாம்பாளையம் பகுதியில் இருந்தது. அதை ரூ.50 லட்சத்துக்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் (48) என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்து விற்றார். 

6 மாதத்துக்கு பிறகு முத்துக்குமாரை தொடர்பு கொண்ட பொன்னு சாமி ரூ.50 லட்சத்தை தந்து விடுவதாகவும், நிலத்தை மீண்டும் தருமாறும் கேட்டுள்ளார். அதை ஏற்ற முத்துக்குமார் பணத்தை ஏற்றுக் கொண்டு நிலத்தை திரும்ப கொடுத்து விட்டதாக தெரிகிறது.

கத்தியால் குத்திக் கொலை

இந்த நிலையில் பொன்னுசாமியை தொடர்பு கொண்டு பேச வேண் டும் என்று கூறி முத்துக்குமார் அழைத்து உள்ளார். 

அதை நம்பிய பொன்னுசாமி, தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணுடன் நல்லாம்பாளையம் கந்தன்நகர் பகுதிக்கு காரில் சென்றார். 

அங்கு முத்துக்குமார், அவருடைய நண்பரான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ராஜன் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

 அவர்களிடம் பொன்னுசாமி பேச சென்ற போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் திடீ ரென்று பொன்னுசாமியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

பழிவாங்க திட்டம்


அதை பார்த்து ஸ்ரீபிரியா அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் ஓடி வரவே முத்துக்குமாரும், ராஜனும் தப்பி ஓடி விட்டனர். 

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், விற்ற நிலத்தை ஒரு மாதத்திலேயே திருப்பி வாங்கியதால் ஆத்திரம் அடைந்த முத்துக் குமார் தே.மு.தி.க. பிரமுகர் பொன்னுசாமியை பழிவாங்க திட்டமிட் டார். 

அதன்படி, உங்களது நிலத்தை நல்ல விலைக்கு வாங்க ஆட்கள் உள்ளதால் உடனே வர வேண்டும் என்று பொன்னுசாமியை, முத்துக்குமார் அழைத்து உள்ளார். 

2 பேர் கைது

அதை நம்பி சென்ற பொன்னுசாமியிடம், எனக்கு விற்ற நிலத்தை ஏன் திரும்பி வாங்கினீர்கள் என்று முத்துக்குமார் கேட்டு உள்ளார். 

அப்போது தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் பொன்னுசாமியை, தனது நண்பர் ராஜனுடன் சேர்ந்து முத்துக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்தனர். 

பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரியவந்தது.


இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார், அவரு டைய நண்பர் ராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.

மேலும் செய்திகள்