மொடக்குறிச்சியில் பரிதாப சம்பவம்; மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி ரோட்டில் விழுந்த பெண் சாவு

மொடக்குறிச்சியில் மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி ரோட்டில் விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-15 21:45 GMT
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சியில் மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி ரோட்டில் விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார். 
சக்கரத்தில் சேலை சிக்கியது
மொடக்குறிச்சி காந்திஜி வீதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 64). இவருடைய மகன் வெங்கடாசலம். நேற்று முன்தினம் செல்லம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் செல்லம்மாளின் பேரன் மொபட்டில் பாட்டியை வைத்துக்கொண்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.  மொடக்குறிச்சி ஊஞ்சப்பாளையம் அருகே சென்றபோது செல்லம்மாளின் சேலை மொபட் சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலை தடுமாறி செல்லம்மாள் ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. 
இறந்தார்...
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து செல்லம்மாளை மீட்டார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் நேற்று முன்தினம் இரவு இறந்தார். 
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்