காதல் திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் சாவு

விஜயாப்புராவில், காதல் திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலியானார். ஆனால் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-02-15 20:38 GMT
விஜயாப்புரா: விஜயாப்புராவில், காதல் திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலியானார். ஆனால் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் மகன்

விஜயாப்புரா டவுன் காந்திசவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தகிர் கூடகி(வயது 28). இவரது தந்தை காந்திசவுக் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முஸ்தகிரும், முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் மகளான அதிகா என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலுக்கு அதிகாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

கடந்த 7 மாதத்திற்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி முஸ்தகிரும், அதிகாவும் பெங்களூருவில் வைத்து திருமணம் செய்து இருந்தனர். பின்னர் அவர்கள் மராட்டியத்தில் வசித்து வந்தனர். அதிகா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முஸ்தகிரும், அதிகாவும் விஜயாப்புராவுக்கு திரும்பி வந்து தனியாக வசித்து வந்தனர்.

கொலை செய்யப்பட்டதாக புகார்

நேற்று முன்தினம் முஸ்தகிர் தனது ஸ்கூட்டரில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் உயிரிழந்து இருந்தார். இதுபற்றி அறிந்த காந்திசவுக் போலீசார் முஸ்தகிர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் முஸ்தகிரை அவரது தந்தை, உறவினர்கள் சேர்ந்து கொலை செய்து விட்டதாக காந்திசவுக் போலீஸ் நிலையத்தில் அதிகா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்