‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வேண்டும்
தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக காளியம்மன் கோவில் தெருவுக்கு வரும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக தெருவாசிகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலம் சீரமைப்பு பணிக்காக குடிநீர் வினியோக நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே காளியம்மன் கோவில் தெரு பகுதி மக்களின் நலன் கருதி விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் வரை முறையான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-காளியம்மன்கோவில் தெருவாசிகள், பூதலூர்.