ஆவணங்கள் இன்றி மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரம் பறிமுதல்

திருவையாறு அருகே ஆவணங்கள் இன்றி மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-15 19:53 GMT
திருவையாறு:-

திருவையாறு அருகே ஆவணங்கள் இன்றி மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  

பேரூராட்சி தேர்தல்

தஞ்சை மாவட்டம் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை கண்டியூர்- திருக்காட்டுப்பள்ளி மெயின் சாலையில் மேலத்திருப்பூந்துருத்தி கடைவீதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா தலைமையில் போலீஸ் ஏட்டுக்கள் செந்தில்குமார், விஜயராகவன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கண்டியூர் நோக்கி வந்த ஒரு மினி வேனை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் வந்தவர்கள் மசாலா பாக்கெட்டுகளை கடைகளில் போட்டுவிட்டு பணம் வசூல் செய்துவிட்டு நடுக்கடை செல்வதாக தெரிவித்தனர். 

கருவூலத்தில் ஒப்படைப்பு

வேனில் வந்த விற்பனையாளர் போத்தி கணேசன், சுமை தூக்கும் தொழிலாளி மகேந்திரன் ஆகியோரிடம் ரூ.65 ஆயிரத்து 101 இருந்தது. இந்த பணத்திற்கான ஆவணங்கள் சரியாக இல்லாததால் பறக்கும் படை அதிகாரி கீதா பணத்தை பறிமுதல் செய்து மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் ஒப்படைத்தார். 
அவர் பணத்தை எண்ணி சரிபார்த்து சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்