திருமண மண்டபத்தில் ஆசிரியையின் 5 பவுன் நகை, பணம் திருட்டு

திருமண மண்டபத்தில் ஆசிரியையின் 5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-02-15 19:19 GMT
திருமண மண்டபத்தில் ஆசிரியையின் 5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு
முசிறி பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 44). ஆசிரியையான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குணசீலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது மணமகன் அறையில் சித்ரா தனது கைப்பையை வைத்துவிட்டு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பின்னர் அறைக்கு வந்து பார்த்தபோது, கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் நகை, செல்போன், ரூ.8 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்