ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை கலெக்டர் வரவேற்றார்
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலை நிகழ்ச்சிகளுடன் மலர்தூவி வரவேற்றார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலை நிகழ்ச்சிகளுடன் மலர்தூவி வரவேற்றார்.
வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
சென்னையில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் இடம்பெற்ற வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் சென்று வருகிறது. வேலூர் மாவட்டம், வள்ளிமலையிலிருந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்தது. சீக்கராஜபுரம் போலீஸ் சோதனை சாவடி அருகில் மங்கள இசை, வரவேற்பு கலை நிகழ்ச்சிகள், கோலாட்டம், கிராமியக் கலை நாட்டிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று மாலை மலர்தூவி வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மலர்தூவி வரவேற்றார்கள். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய குழுவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
பார்வையிடலாம்
இதனைத் தொடர்ந்து அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை பார்வையிடலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி கலெக்டர் பூங்கொடி, துணை கலெக்டர்கள் இளவரசி, தாரகேஸ்வரி, தாசில்தார் ஆனந்தன், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.