சிங்கம்புணரியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்

தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றிய சிங்கம்புணரியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-02-15 18:20 GMT
சிங்கம்புணரி,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த மாவட்ட புரட்சித்தலைவி பேரவை துணைத்தலைவர் ராஜேந்திரன், சிங்கம்புணரி பேரூராட்சி இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணைத்தலைவர் ரபீக் (பேரூராட்சி 1-வது வார்டு கழகச் செயலாளர்), சிங்கம்புணரி பேரூராட்சி கழக மாவட்ட பிரதிநிதி நித்யா ஜெயம்கொண்டான் மற்றும் 5-ஆவது வார்டு தேன்மொழி, சிங்கம் புணரி 5-வது வார்டு கழகச்செயலாளர் கணேஷ் ஆனந்த் ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய காரணங்களுக்காக நேற்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்