வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற கலால் அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கலால் அதிகாரிக்கு, நாகர்கோவில் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது
நாகர்கோவில்,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கலால் அதிகாரிக்கு, நாகர்கோவில் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது
ஓய்வு பெற்ற கலால் அதிகாரி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் மாடசாமி(வயது 83). இவர் கலால்த்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் குமரி மாவட்டத்தில் கலால்த்துறை உதவி இயக்குனராக 1992-ல் இருந்து 1997 வரை பொறுப்பு வகித்தார்.
அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதில் வருமானத்துக்கு அதிகமாக 90.32 சதவீதம் சொத்துக்கள் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு 2005-ம் ஆண்டில் இருந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாயக்கிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாடசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடசாமிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜரானார்.