841 லிட்டர் சாராயம், பள்ளத்தில் கொட்டி அழிப்பு

கீழ்வேளூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயம், பள்ளத்தில் கொட்டி அழிக்கப்பட்டது

Update: 2022-02-15 17:18 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயம், பள்ளத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.
841 லிட்டர் சாராயம் பறிமுதல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதியில் இருந்து  சாராயம் கடத்தி வரப்பட்ட 2 வழக்குகளில் 841 லிட்டர் சாராயத்தை கீழ்வேளூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 
மேலும் இதுதொடர்பான கோப்புகளை நாகை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயத்தை அழிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
பள்ளத்தில் கொட்டி அழிப்பு
கோர்ட்டு உத்தரவின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த  841 லிட்டர் சாராயத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார்  போலீஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள இடத்துக்கு கொண்டு சென்றனர். 
அங்கு நாகை மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் குணசேகரன் முன்னிலையில் பள்ளம் தோண்டி அதில் சாராயத்தை கொட்டி அழித்தனர்.

மேலும் செய்திகள்