நில அளவை அலுவலர்கள் விடுமுறை எடுத்து போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நில அளவை அலுவலர்கள் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-15 15:26 GMT
ஊட்டி

நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை நில அளவைத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஒரு நாள் தற்செயல் விடுமுறை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நில அளவை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர நில அளவை பிரிவு அலுவலகம் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தது.  

ஊட்டி தாலுகா நில அளவை பிரிவு அலுவலகம் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் பட்டா மாறுதல், நில அளவைப் பணி, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி, நில அலுவல் உள்ளிட்ட அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

 அதேபோல் பிற 5 தாலுகாக்கள், நகராட்சிகளில் நில அளவை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தினர் கூறும்போது, எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 44 பேர் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

மேலும் செய்திகள்