விபத்தை தடுக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படுமா
விபத்தை தடுக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படுமா
மடத்துக்குளம் அருகே 3ரோடு சந்திப்பில் வேகத்தடை மற்றும் விபத்தை தடுக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று ரோடு சந்திப்பு
மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட அமராவதி சர்க்கரை ஆலைக்கு அருகில் 3 ரோடு சந்திப்பு உள்ளது. போத்தநாயக்கனூர் வழியாக பாப்பான்குளம் செல்லும் ரோடு, சாலரப்பட்டி வழியாக கண்ணமநாயக்கனூர் செல்லும் ரோடு, நரசிங்காபுரம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் இணையும் ரோடு ஆகிய 3 ரோடுகள் இந்த இடத்தில் சந்திக்கின்றன.ஆனால் இந்த பகுதியில் இது குறித்த போதிய அறிவிப்புகள் இல்லை.இதனால் விபத்துக்கள் நடக்கிறது.
இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது
20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த 3 ரோடு சந்திப்பை பயன்படுத்துகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் இந்த சந்திப்பில் போதிய அறிவிப்பு பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லை.
அறிவிப்பு பலகை
வேகத்தடையும் இல்லாத காரணத்தால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கள் நடக்கிறது.
விபத்துக்கள் நடப்பதை தடுக்க இந்த சந்திப்பில் வேகத்தடை அமைப்பதோடு, ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.