கோபி அருகே மாரியம்மன் கோவிலில் நகை திருட்டு-தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

கோபி அருகே மாரியம்மன் கோவிலில் நகை திருட்டு போனது. தொடர்ந்து கோவில்களில் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

Update: 2022-02-14 21:43 GMT
கடத்தூர்
கோபி அருகே மாரியம்மன் கோவிலில் நகை திருட்டு போனது. தொடர்ந்து கோவில்களில் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள். 
மாரியம்மன் கோவில்
கோபி அருகே உள்ள பொலவக்காளிபாைளத்தில் ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிவில் சுந்தரமூர்த்தி என்பவர் பூசாரியாக உள்ளார்கள். நேற்று முன்தினம் வழக்கமான பூஜைகளை முடித்துக்கொண்டு சுந்தரமூர்த்தி கோவிலை பூட்டினார்.
 பிறகு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் நேற்று அதிகாலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே பொருட்கள் வைக்கும் அறையில் இருந்த 2 பவுன் நகையை காணவில்லை. 
நகை திருட்டு
யாரே மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். பின்னர் பொருட்கள் வைக்கும் அறையில் இருந்த நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதை அறிந்ததும் கோவில் தர்மகர்த்தா கிருபானந்தம் கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து கோவில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
கொள்ளை கும்பல் பதுங்கலா?
 கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் பிரசாத கடையில் ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள்.
மேலும் கோவில் உண்டியலையும் உடைக்க முயன்றுள்ளார்கள். அதற்குள் அபாய மணி ஒலித்ததால் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். 
கோபி பகுதியில் கோவிலை குறிவைத்து கொள்ளையடிக்கும் குப்பல் பதுங்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். அதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொள்ளையர்களை பிடிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்