குடும்ப தகராறை விசாரிக்க சென்ற போலீஸ்காரரின் கையை கடித்தவர் கைது- மற்றொருவர் தலைமறைவு

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற போலீஸ்காரரின் ைகயை கடித்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார்.

Update: 2022-02-14 21:42 GMT
சென்னிமலை
குடும்ப தகராறை விசாரிக்க சென்ற போலீஸ்காரரின் ைகயை கடித்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார். 
மனைவிக்கு அடி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள வேதநாயகம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜோதிவேல் (வயது 51). இவரது மகன் நவீன் கிருஷ்ணன் ( 25). இவருடைய மனைவி கோமதி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நவீன் கிருஷ்ணன் மதுபோதையில் கோமதியை அடித்ததாக கூறி அவருடைய அண்ணன் மெய்யப்பன் என்பவர் சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார்.
இதை விசாரிப்பதற்காக சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் மகேஷ்குமார், கார்த்தி ஆகிய 2 பேர் நவீன் கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்கள். 
கையை கடித்தனர்...
அப்போது நவீன் கிருஷ்ணனும், அவருடைய தந்தை ஜோதிவேலும் போலீஸ்காரர்கள் மகேஷ்குமார், கார்த்தியை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் மகேஷ்குமாரின் கையை கடித்துவிட்டதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும் இதுகுறித்து மகேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்குப்பதிவு செய்து ஜோதிவேலை கைது செய்தார். தலைமறைவாக உள்ள நவீன்கிருஷ்ணனை தேடி வருகிறார்.


மேலும் செய்திகள்