வாகனம் மோதி பால் வியாபாரி சாவு
நெல்லையில் வாகனம் மோதி பால் வியாபாரி இறந்தார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 63). பால் வியாபாரி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக மேலப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக கருப்பசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.