பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலைக்கு வார்ப்பு வடிவம் கொடுக்கும் பணி

கும்பகோணத்தில் பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலைக்கு வார்ப்பு வடிவம் ெகாடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2022-02-14 20:03 GMT
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலைக்கு வார்ப்பு வடிவம் ெகாடுக்கும் பணி நடைபெற்றது. 
ஐம்பொன் சிலை 
கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 8-ந்தேதி குன்னூருக்கு ஹெலிகாப்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் மற்றும் 11 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.
மறைந்த பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் வகையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 120 கிலோ எடையில் ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் பிபின் ராவத் மார்பளவு ஐம்பொன் சிலை தயாரித்து அதனை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பகோணத்தில் உள்ள சிற்ப சாலையில் பிபின் ராவத் மார்பளவு ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டு நேற்று அதற்கு வார்ப்பு வடிவம் கொடுக்கும் பணி நடைபெற்றது.
இதில் கும்பகோணம் முன்னாள் படைவீரர்கள் மேஜர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
பிரதமர் மோடியிடம் சிலை ஒப்படைப்பு 
முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடும் பிபின் ராவத் ஐம்பொன் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலைக்கான பணிகள் நிறைவடைந்ததும், சிலை சிதம்பரத்திலிருந்து 6  மாநிலங்கள் வழியாக புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் இந்தியா கேட் அருகே உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும்  முப்படை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாவானே ஆகியோர் முன்னிலையில் சிலை ஒப்படைப்படும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்