தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கைக்குழந்தையுடன் வந்த பெண்

தனது கணவர் மீது பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக தனது கைக்குழந்தையுடன் வந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-14 19:56 GMT
தஞ்சாவூர்:
தனது கணவர் மீது பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக தனது கைக்குழந்தையுடன் வந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைக்குழந்தையுடன் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பசுபதி கோவில் மணல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கனிமொழி. நேற்று இவர் தனது  உறவினர்கள் 20 பேருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தார். அங்கு கொரோனா காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாததால் மனுவை அங்கு உள்ள பெட்டியில் தனது மனுைவ போட்டார். 
பின்னர் கனிமொழி தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். 
போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது:-
உரிய நடவடிக்கை
எதனது கணவர் அழகேசன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணிச்செயலாளராக கடந்த 7 ஆண்டுகளாக உள்ளார்.  கடந்த மாதம் 16-ந் தேதி எங்கள் சமூக பொறுப்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டு இருந்தது.
அப்போது அய்யம்பேட்டை போலீசார் வந்து நாட்டாமைகளை ஒருமையில்  திட்டினர். இதுகுறித்து கேட்ட எனது கணவர் அழகேசன் மீது உண்மைக்கு புறம்பாக ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டு சிறையில் அடைத்து உள்ளார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்