கும்பாபிஷேகத்தில் 2 பேரிடம் 8 பவுன் சங்கிலி அபேஸ்
கும்பாபிஷேகத்தில் 2 பேரிடம் 8 பவுன் சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது
அரிமளம்
அரிமளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி நந்தினி (வயது 27). சம்பவத்தன்று அரிமளத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நந்தினி தனது மகனுடன் சென்றிருந்தார். அப்போது அவரது மகன் யோஜித் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ அபேஸ் செய்தனர். இதேபோல, கீழப்பனையூரை அடுத்துள்ள வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த பாலசண்முகம் மனைவி செல்லம்மாள் (75), அங்கு நடைபெற்ற அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டநெரிசலில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டனர். இதுகுறித்து புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.