முத்தாலம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

விழுப்புரம் அருகே முத்தாலம்மன் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத் தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-14 19:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த கெடார் கிராமத்தில்  பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
அதன் பின்னர் 11-ந் தேதியன்று சக்தி கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சிகளும், செல்லியம்மனை அழைத்துவர குதிரை புறப்பாடும், இரவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும், 12-ந் தேதி மாலை மேளக்கச்சேரியும், இரவில் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும் நடந்தது.

தெப்ப உற்சவம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஆன்மிக பட்டிமன்றம், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பின்னர் இரவு 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட முத்தாலம்மன், தெப்பலில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் தெப்ப உற்சவம் நடந்தது.
இதில் கெடார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தெப்ப உற்சவத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கெடார் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்