மினிபஸ் திருடியவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சியில் மினி பஸ் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-14 19:20 GMT
மலைக்கோட்டை, பிப்.15-
திருச்சியில் மினி பஸ் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மினிபஸ் திருட்டு
திருச்சி சிந்தாமணி ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 59). இவர் மினிபஸ் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ந்் தேதி பாலசுப்ரமணியன் என்பவரிடம் ஒரு மினி பஸ்சை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், பின்னர் அதை பழுது பார்த்து தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். இதை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 இந்நிலையில் காணாமல் போன மினி பஸ் கும்பகோணம் அருகே இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மினி பஸ்சை மீட்டனர்.
கைது
பின்னர்அதனை திருடிய சென்ற மயிலாடுதுறை அருகே சீர்காழி தில்லை விடங்கன் திட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவரை கைது செய்தனர். மேலும் மினி பஸ்சை திருடி சென்ற வழக்கில் பாலசுப்பிரமணியன், பாலு ஆகிய 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்