கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது

நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-14 18:33 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லபள்ளி பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (வயது55) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல கிருஷ்ணகிரி போத்தி நாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் கவியரசு (30) என்பவரும் 25 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்தும் 25 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

மேலும் செய்திகள்