மணல்மேடு;
மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தநிலையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவதாஸ், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில் புறப்பட்ட கொடி அணிவகுப்பு மணல்மேடு பேரூராட்சி சார்ந்த வார்டுகள் வழியாக சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.