மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை

நாகர்கோவிலில் மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-14 18:31 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
நாகர்கோவில் சபையார்குளம் பகுதியை சேர்ந்தவர் மணி சந்திரன் (வயது 35), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணி சந்திரனுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்